Header image alt text

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை தேடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Read more

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார். Read more

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்தி​ரேலியாவுக்குச் செல்லமுயன்ற மேலும் 35 பேர் கடற்படையின​ரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டை மிக மோசமாக பாதித்துள்ளதை உணர முடிவதாகவும், நியூசிலாந்து அரசாங்கம் இலங்கைக்கு இயலுமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ள நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹூதா, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு அவசர தேவைகளுக்காக  இலங்கையில் உள்ள யுனிசெப் நிறுவனத்திற்கு 800,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக  தெரிவித்துள்ளார். Read more

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன் மூலம் ஆடை, விவசாயம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். Read more