இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டை மிக மோசமாக பாதித்துள்ளதை உணர முடிவதாகவும், நியூசிலாந்து அரசாங்கம் இலங்கைக்கு இயலுமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ள நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹூதா, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு அவசர தேவைகளுக்காக  இலங்கையில் உள்ள யுனிசெப் நிறுவனத்திற்கு 800,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் இலங்கையை மீட்கும் வேலைத்திட்டத்தில்  ஒத்துழைப்புக்களை வழங்க தாம் சர்வதேச சமூகத்துடனும், குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.