ஜெர்மனி லுட்விகஸ்பேர்க் நகரில் 25.06.2022 சனிக்கிழமை சர்வதேச கலாச்சார நிகழ்வாக நிகழ்த்தப்பட்ட சந்தைத் திருவிழாவில் இலங்கையர் ஜனநாயக முன்னணியும் கடந்த காலங்களைப்போல் இம்முறையும் கலந்து சிறப்பித்திருந்தது.

இந்நிகழ்வின்போது தமிழர் பாரம்பாரிய உணவு வகைகள் உடனுக்குடன் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன.

மூன்றாண்டுகள் கொரானாவின் தாக்கத்தினால் நிறுத்தி வைத்திருந்த இத்திருவிழாவானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்கள், எமது கட்சியினுடைய கிளை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பெருமளவிலான தமிழ்மக்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

அங்கு இடம்பெற்றுவரும் கொண்டாட்டங்களின்போது உணவுச் சாலைகளை அமைத்து, தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தாயகத்தில் வாடும் உறவுகளுக்கு அளப்பரிய உதவிகளை இலங்கையர் ஐனநாயக முன்னணி தொடர்ந்து செய்து வருகின்றது.

தமது உழைப்பில் சிறு பகுதியை தமது உறவுகளுக்கு உதவும் புலம்பெயர் வாழ் நல் உள்ளங்கள், தமது ஒரு நாள் உழைப்பினை முழுவதுமாக உறவுகளுக்கு வழங்கும் முகமாக தமது நேரத்தை முழுமையாக மக்கள் அர்ப்பணித்து இந்த நிகழ்வின்போது மேற்படி பணியினை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ் தொண்டர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.