எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் மாத்திரம் திறந்திருக்கும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனைத்து பிரதேச செயலகங்களிலும் உள்ள மாவட்ட பதிவுப் பிரிவில் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ் பிரதிகளை திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என, பதிவாளர் நாயக திணைக்களம் அறிவித்துள்ளது.

காணிப் பதிவு அலுவலகங்களின் சேவைகளும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இடம்பெறும் என்றும் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.