இன்று நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில், இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த மேலதிகமாக 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவலின் படி,

800,000 இலங்கை குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கும், சுமார் 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு போசாக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், பாடசாலைகளில் ஊட்டச்சத்து திட்டத்தை ஆதரிப்பதையும் இந்த நிதியுதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக சுமார் 30,000 விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த முயற்சி திட்டமிட்டுள்ளது.

“இலங்கைக்கு 20 மில்லியன் டாலர் கூடுதல் உதவி வழங்குவதாக ஜனாதிபதி பிடென் அறிவித்திருப்பது, உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கூறினார்.