ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

(பின்னிணைப்பு – June 28, 2022 11:46 am)

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகம் ஒன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (27) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு – குடியகல்வு அலுவலகங்களைத் திறக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் ஒன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.