யாழ். கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாசாலை மாணவன் ஜெ.லக்சிகனின் பாடசாலைப் போக்குவரத்துக்கு உதவும் வகையில் அவருக்கு 48,000/= ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். எழுவைதீவு பத்திமா விளையாட்டுக் கழகத்திற்கு 25,000/= ரூபா நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டது.

கழகத்தின் பிரித்தானிய கிளையினரால் வழங்கப்பட்ட நிதியுதவியின் ஊடாக மேற்படி இரு உதவிகளும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டன.