வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவானது, நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ஜூலை 10ஆம் திகதி வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.