முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு  நகர் பகுதியில் இன்று பெண்கள் பலர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை தங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை  முன்னெடுத்தனர்.

இதேவேளை. குறித்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் இன்று வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு, மேலும் பலரை தேடி பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது