ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் அவரை பிரதமராக நியமிக்கவும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்வேன். அமைச்சர்களும் இராஜினாமா செய்வார்கள் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம். அதனை முன்​னெடுக்க உதவுங்கள், வீதிக்கு இறங்க வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்றத்தை கூட்டி, விவாதத்தை நடத்தி ​வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.

அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் நாங்கள் இராஜினாமா செய்ய தயார் என்றார்.