எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் Khalid Nasser Al Ameri இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) தூதரகத்தில் இடம் பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் எண்ணெய் நெருக்கடி குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம், மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகபங்காளிகளில் ஒன்றாகும் என்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் வலுவான உறவு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது நினைவு கூர்ந்தார்.
முறையான, வலுவான மற்றும் வெளிப்படையான வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கையை கட்டியெழுப்ப தனது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இதன் போது தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதியளித்தார்.