கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் பல அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை – ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து தொடர்ந்தும்  தங்கியிருப்பதற்கு தயாராக இருப்பதாக நம்பப்படுவதால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய, புதுக்கடை நீதிமன்றம் இந்த தடை உத்தரவை விதித்துள்ளது.

இதன்படி, ‘சுரகிமு லங்கா’ தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் வண. பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் வண. உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசத் அறக்கட்டளையின் ஸ்தாபகர் களுபோவில பதும தேரர் ஆகியோருக்கு மேற்படி இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. (