வன்முறை தீர்வல்ல” என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க துாதுவர்  ஜூலி சங், போராட்டம் நடத்துபவர்கள், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள்“ என்று கோரிக்கை விடுத்துள்ளார். ட்விட்டரில் பதிவொன்றை இட்டு அவர் இந்த கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், “அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும் என்பதுடன், பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று நினைவூட்டுகிறேன்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “குழப்பமும், பலப்பிரயோகமும் தற்போதைய நிலையில் இலங்கையர்களுக்கு பொருளாதாரம் அல்லது அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வராது” என்றும் ஜூலி சங் தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.