பொதுமக்களால் நாளை (09) நடத்தப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி  தனது ஆதரவை வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கையொன்றை வெளியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, போராட்டங்களின் போது மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பொலிஸார் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரிடம் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.