கொழும்பு ஓல்கொட் மாவத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே, இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிந்தைய செய்தி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.