கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நீச்சல் குளத்தில் நீராடும் புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இப்போது இரவு உணவு  சமைக்க தயாராகும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இன்று பிற்பகல், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், மாளிகையை சுற்றிப்பார்த்ததுடன், சொகுசு ஆசனங்களில் அமர்ந்து தேநீர் அருந்தியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் நுழைந்தயைடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள், பஸ்கள் மூலம் மாளிகையை விட்டு வெளியேறுவதை அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை வெளியேறப் போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.