கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளனர் என்று பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை நோக்கி போராட்டக்காரர்கள் படையெடுத்துள்ளனர்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் நடத்தியமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.