இலங்கை மக்களுடன் இந்தியா நிற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள நிலைமை தொடர்பான ஊடகக் கேள்விகளுக்கான பதிலளிப்பாகவே குறித்த கருத்தை பக்‌ஷி வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பக்‌ஷி, இலங்கையில் அண்மைய நிலைமைகளை தாங்கள்
நெருக்கமாக அவதானிப்பதாகவும், அயல்நாடு முதன்மை கொள்கை மூலம் இலங்கையிலுள்ள
மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் 3.8 பில்லியனுக்கும் அதிகமான உதவிகளை
வழங்கியதாகக் கூறியுள்ளார்.