ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மெய்நிகர் வழி மத்தியகுழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 02.00 மணிமுதல் 04.30 மணிவரை கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக, கட்சியின் ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களையும் மறைந்த கழகக் கண்பமணிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கட்சியின் நிர்வாக விடயங்கள், வரவிருக்கின்ற கட்சியின் மகாநாடு என்பன தொடர்பில் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டதுடன், இன்றிருக்கின்ற அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக தலைவர் சித்தார்த்தன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றிருந்த அங்கத்தவர்கள் பலர் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

இதன்போது சர்வகட்சி ஆட்சியொன்று வருமாக இருந்தால் அதில் நாங்கள் நேரடியாக பங்குபற்றக் கூடாது என்றும், ஆதரவு கொடுப்பதா இல்லையா என்பதை கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.