ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட 17,850,000 ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பணத் தொகை தொடர்பில் நாளை தினம் நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பணத் தொகை ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து போராட்டக்காரர்களுக்கு கிடைத்திருந்தது.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் அவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்திருந்தனர்.

இது தொடர்பில் கொழும்பு மத்தி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் போராட்டக்காரர்களிடம் இருந்து குறித்த பணத் தொகை பொறுப்பேற்கப்பட்ட நிலையில் குறித்த பணத்தொகை தற்பொழுது கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பின் கீழ் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.