லண்டனில் வசிக்கும் எமது கட்சி செயற்பாட்டாளர் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது தந்தையாரான அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஏழாமாண்டு நினைவை முன்னிட்டு இன்று (11.07.2022) திங்கட்கிழமை கிளிநொச்சியில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 53 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி விவேகானந்தநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடம் மற்றும் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிட நிழற்குடை ஆகிய இடங்களில் வைத்து இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதி சிவபாலசுப்பிரமணியம், தோழர்கள் சந்திரன், ரூமி, புத்துவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார்கள்.