லண்டனில் வசிக்கும் எமது கட்சி செயற்பாட்டாளர் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது தந்தையாரான அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஏழாமாண்டு நினைவை முன்னிட்டு இன்று (11.07.2022) திங்கட்கிழமை மாலை வவுனியா திருநாவற்குளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 80 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.

மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான சு.காண்டீபன், தோழர்கள் சந்திரன், ரூமி, சதா, பண்டாரவன்னியன் சனசமூக நிலைய உபதலைவர் தமிழ்செல்வன் அன்னலதா, சிறுவர் கழக இயக்குநர் கலிஷ்ரா மற்றும் தோழர் நாகராஜா அவர்களின் நண்பர்களும் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார்கள்.