ஜூலை 15 ஆம் திகதி பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகியதாக பாராளுமன்றத்தில் அறித்ததை அடுத்து 20 ஆம் திகதி பாராளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.