Header image alt text

12.07.2006இல் யாழில் மரணித்த தோழர் வோல்ரர்) (செபஸ்ரியான் இருதயராஜன்- யாழ்ப்பாணம்) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

தற்போதைய பிரதமர் ஏதேனும் ஒரு வகையில் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால், அது மக்கள் அபிலாஷைகளுக்கு புறம்பானதாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதியின் தெரிவு அரசியலமைப்பின் பிரகாரம் இடம்பெறுமாயின், தற்போதைய பிரதமர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் The Hindu பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, The Hindu பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது. Read more

மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக வௌிநாட்டு பயணத்தடையை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

அலரி மாளிகைக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் சிகிச்சையின் பின் வௌியேறியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.