அலரி மாளிகைக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் சிகிச்சையின் பின் வௌியேறியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.