ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் இலங்கையை விட்டு இன்று (13) அதிகாலை வெளியேறியுள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை உறுதிப்படுத்தின.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டா, மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளார் என்று இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னர், தனது இராஜினாமா கடித்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பலாம் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாகவும் விடயத்தின் தீவிரத் தன்மை காரணமாக அந்த அதிகாரி தன்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.