பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்திய மக்கள் பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் எனவும், அவர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்து இன்று (13) காலை முதல் கொழும்பு, மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் பல தடவைகள் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்ட போதிலும், அந்தத் தாக்குதலையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, சிறிது நேரத்திற்கு முன்பு போராட்டக்காரர்கள் வீதி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.