தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33வது வீரமக்கள் தினம் இன்று ஆரம்பமானது. வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று 13/07/2022 காலை 10.00 மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது மௌன அஞ்சலி இடம்பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான தோழர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களின் அஞ்சலியுரை இடம்பெற்றது.

தொடர்ந்து கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் இன்றைய நிகழ்வு நிறைவுபெற்றது

நிகழ்வில் தோழர்கள் பற்றிக் ( நிர்வாக பொறுப்பாளர்), கொன்சால் ( மன்னார் மாவட்ட இணைப்பாளர்), த.யோகராஜா – யோகன்(வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர்), வே.குகதாசன்-குகன்(வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்), சு.காண்டீபன்(வவுனியா நகரசபை உறுப்பினர்), ரவி, சிவா, கண்ணன், ஓசை, சங்கர், சுதா, பார்த்தீபன், ஆதி, அருண் மற்றும் தோழர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.