தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் புக்கேபிளாக்ஷ் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புளொட் சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் வரதன் அவர்கள் ஆரம்பித்து வைக்க, புளொட் சுவிஸ் கிளையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான தோழர் ரஞ்சன் அவர்கள் தலைமை தாங்கி தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவரும், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகளையும் மற்றும் அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து வருடாவருடம் நடாத்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வானது வழமை போல் இவ்வருடமும் புளொட் சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையால் இன்றையதினம் இங்கு நினைவு கூறப்படுகிறது என்பதைக் கூறி தோழர் ரஞ்சன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இதன் முதல்நிகழ்வாக “ஆகுதியாகிய அனைவருக்குமான” தீபச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது. தீபச்சுடர்களை கழக சுவிஸ் கிளையின் சார்பில் பொறுப்பாளர் தோழர்.ஆனந்தன், தோழர்.சித்தா, திருமதி.புனிதா இரட்ணகுமார், திருமதி.மனோகரி செல்வபாலன், திருமதி.வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா, திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திருமதி.செல்வி.கருணாகரன் (பிரபா) ஆகியோர் ஏற்றி வைக்க ஈகைச்சுடர்களை கழக சுவிஸ் கிளை சார்பில் தோழர்.இரட்ணகுமார், தோழர்.ரஞ்சன், தோழர்.பாபு ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

அடுத்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து வீரமக்களும் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிட அமைதி வணக்கம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து மலரஞ்சலி நிகழ்வை தோழர்கள் சிவா, ஜெகண்ணர், தேவண்ணர், புவி, ரமணன், ராசன், உட்பட கழகத் தோழர்கள், ஆரம்பித்து வைக்க கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் நடத்தினர்.

இதனையடுத்து அனைவரையும் வரவேற்று தலைமையுரையை தோழர்.ஆனந்தன் .(சுவிஸ் கிளை பொறுப்பாளர்) நிகழ்த்தினார். அத்தோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையினர் நடாத்தும் 33 வது வீரமக்கள் தினத்துக்கான கழகத்தின் ஜேர்மன் கிளையின் வாழ்த்து செய்தியை கழக சுவிஸ் கிளைத் தோழர் சிவா வாசித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையினர் நடாத்தும் 33 வது வீரமக்கள் தினத்துக்கான கழகத்தின் பிரான்ஸ் கிளையின் வாழ்த்து செய்தியை கழக சுவிஸ் கிளைத் தோழர் ரமணன் வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி ஜெயவாணி குகராஜசர்மா அவர்களின் நெறியாள்கையில் செல்வி சுபிர்னா கருணாகரன் அவர்களின் சிவநடனம் சிறப்பாக நடைபெற்றது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையினர் நடாத்தும் 33 வது வீரமக்கள் தினத்துக்கான கழகத்தின் அமெரிக்காக் கிளையின் பொறுப்பாளர் தோழர்.கோபியின் வாழ்த்து செய்தி வீடியோ வடிவில் ஒளிபரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கடந்த கால வரலாறு பற்றி (கழகத்தின் (புளொட்) தோழர்களால் 1990 ம் ஆண்டுக்கு பின்னர் வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட புனர்வாழ்வு, புனரமைப்பு) சிறு குறிப்பு வீடியோ வடிவில்.. (பகுதி ஒன்று) காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி ஜெயவாணி குகராஜசர்மா அவர்களின் நெறியாள்கையில் செல்வி அனுத்திகா அரிராஜசிங்கம் அவர்களின் நடனம் சிறப்பாக நடைபெற்றது.

அடுத்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையினர் நடாத்தும் 33 வது வீரமக்கள் தினத்துக்காக சூரிச் தமிழ் சங்கம் சார்பில் தோழர்.இரட்ணகுமார் உரை நிகழ்த்தினார்.

அதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையினர் நடாத்தும் 33 வது வீரமக்கள் தினத்துக்கான கழகத்தின் லண்டன் கிளையின் வாழ்த்து செய்தியை சுவிஸ் கிளைத் தோழர்.காந்தன் வாசித்தளித்தார்.

அதேபோல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையினர் நடாத்தும் 33 வது வீரமக்கள் தினத்துக்கான கழகத்தின் நோர்வேக் கிளையின் வாழ்த்துச் செய்தியை வாசித்தளித்தார் சுவிஸ் கிளைத் தோழர்.சிவா.

இதேவேளை ஸுரபூஜிதா இசைப்பள்ளி ஆசிரியர் திருமதி.வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா அவர்களின் நெறியாள்கையில் செல்வம்.ஜெயச்சந்திரன் அஸ்ரித், செல்வி யுவர்சிகா ஜெயச்சந்திரன், செல்வி.ஓவியா கருணாகரன், செல்வி.ஸுப்ரஜா புஷ்பானந்தசர்மா போன்ற மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.

இதனிடையே தமிழ் மொழியை சுவிஸில் கற்று சரளமாக உரையாடும் சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் நிகழ்வை பார்வையிட வந்த பொது, அவரது தமிழ் மொழித் திறமையை ஊக்குவிக்கும் முகமாக நடன ஆசிரியை திருமதி ஜெயவாணி குகராஜசர்மா அவர்கள் அவரை மேடையேற்றி செவ்வி கண்டதுடன் வீரமக்கள் தின நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவித்தார்.

அடுத்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையினர் நடாத்தும் 33 வது வீரமக்கள் தினத்துக்கான கழகத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் உரை வீடியோ வடிவில் ஒளிபரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கடந்த கால வரலாறு பற்றி (கழகத்தின் (புளொட்) தோழர்களால் 1990 ம் ஆண்டுக்கு பின்னர் வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட புனர்வாழ்வு, புனரமைப்பு) சிறு குறிப்பு வீடியோ வடிவில்.. (பகுதி இரண்டு) காண்பிக்கப்பட்டது.

அடுத்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் கிளையினர் நடாத்தும் 33 வது வீரமக்கள் தினத்துக்கான நன்றியுரையை கழக சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர்.வரதன் நிகழ்த்தினார்.

இறுதியாக மேற்படி நிகழ்வுக்காக கலை நிகழ்வுகளைத் தந்த மாணவ மாணவிகளுக்கு கழக சுவிஸ் கிளைத் தோழர்களின் கரங்களால் “வீரமக்கள் தின நினைவுக் கேடயங்கள்” தோழமையோடு பரிசளிப்பு நிகழ்த்தப்பட்டதுடன் அனைவருக்கும் நன்றி கூறி விழாவை சிறப்புடன் தோழர் ரஞ்சன் அவர்கள் நிறைவு செய்தார்.

-“ஊடகப்பிரிவு, புளொட் சுவிஸ்கிளை”.-