சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்காக எதிர்க்கட்சிகள் பரிந்துரைக்கவுள்ள பெயரை நாளையதினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபாநாயகருக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டளல் அழகப்பெருமவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துக்கொள்ளவில்லை.