முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல, உயர் நீதிமன்றம், இன்று (15) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, ஐவர் அடங்கிய நீதியரசர் குழு பிறப்பித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்விலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.