கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (15.07.2022) மாலை 5.00 மணியளவில் அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியினுடைய உபதலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன், கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு காண்டீபன், தோழர்கள் ரவி, சிவா, ஓசை, வாவா, தவம்(ரஞ்ஜன்), சுரேஸ், தவம், சதீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.