பதில் ஜனாதிபதியாக இன்று (15) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவை, அடுத்த ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்படி, அடுத்த ஜனாதிபதியைத்  தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.