தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களே,

ஆண்டுதோறும் அனுட்டிக்கப்பட்டுவரும் வீரமக்கள் தின நிகழ்வுகள், செயலதிபர் தோழர். க. உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 33 வது நினைவு நாளான 16.07.2022 அன்று மாலை 4.00 மணிக்கு, வவுனியாவில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில் உணர்வுடனும் உள்ளன்புடனும் இடம்பெறவுள்ளன. அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகிறீர்கள்.

எரிபொருள் மற்றும் போக்குவரத்து சாதனங்களின் நெருக்கடிகள் நிறைந்த காலமாகினும், ஏதிர்பார்ப்புகளேதுமின்றி தமது இன்னுயிர்களை ஈகை செய்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் எமது கடமையிலிருந்து வழுவாதிருப்போமாக.

வவுனியா தவிர்ந்த எனைய பிரதேசங்களில், இயன்றவரையிலும் செயலதிபரையும் ஏனைய போராளிகளையும் நினைவு கூரும் நிகழ்வுகளை செயற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.