Header image alt text

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்ற தீர்ப்பு நாளை (19) வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) லண்டன் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது லண்டன் கிளையின் இணைப்பாளர் தோழர் பாலா தலைமையில் தோழர் நேதாஜி (பிரேம்சங்கர்) அவர்கள் தொகுத்து வழங்க புளொட் செயலதிபர் தோழர்.கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்களின் சகோதரர் கதிர்காமர் ஞானேஸ்வரன் அவர்கள் தீபச்சுடரை ஏற்றி வைக்க 16.07.2022 சனிக்கிழமை லண்டன் கே.எஸ்.ஜி சிற்றுண்டிச்சாலை மண்டபத்தில் நடைபெற்றது. Read more

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஒன்பது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இன்று பிற்பகல் சந்தித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, புத்திக பத்திரன உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். Read more

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை மீளப்பெற வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சங்கத்தின் செயலாளர் இசுரு பாலபட்டபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன், இன்று (18) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு, புதன்கிழமையும் (20), வேட்புமனுத்தாக்கல் நாளையும் (19) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதிய ஜனாதிபதிக்கான போட்டியிலிருந்து எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வாவஸ் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. Read more

இன்று (18) முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி,பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் விநியோகங்களைப் பேணுதல் என்பதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.