பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை மீளப்பெற வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சங்கத்தின் செயலாளர் இசுரு பாலபட்டபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன், இன்று (18) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து வௌியிடும் உரிமை, பேச்சுச் சுதந்திரம், சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளிட்ட வௌிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் மக்களின் இறைமையை அரசாங்கமோ, முகவர்களோ மீறுவதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.