இன்று (18) முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி,பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் விநியோகங்களைப் பேணுதல் என்பதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.