Header image alt text

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்து பஸ் கட்டணங்கள் 2.23 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆகக் குறைந்த கட்டணம் 38 ரூபாவாகும்.

நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரின் பெயர்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அதனை வழிமொழிந்தார். Read more

ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விலகியுள்ளார் இதற்கமைய  ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை வாபஸ் பெறுவதாகவும் தனது டுவிட்டர் பதிவில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப் பெருமவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.