ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விலகியுள்ளார் இதற்கமைய  ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை வாபஸ் பெறுவதாகவும் தனது டுவிட்டர் பதிவில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப் பெருமவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.