ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

பாராளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்துள்ளன.

நுகேகொடையில் இடம்பெற்ற கட்சிக்  கூட்டத்துக்கு பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான மூவ​ர், இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டளஸ் அழகபெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே இவ்வாறு தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பில், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.