எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்து பஸ் கட்டணங்கள் 2.23 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆகக் குறைந்த கட்டணம் 38 ரூபாவாகும்.