Header image alt text

நாட்டில் இன்றையதினம் (20) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 664,572 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒற்றை இலக்கத்தில் காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 50க்கும் மேல் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.