எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.