கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். இரண்டு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளரான சதுரங்க பிரதீப் குமார, கசுன் குமாரகே ஆகியோர் கிராஸ்கட் எனும் பகுதியில் இடைமறிக்கப்பட்டு விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோட்டாகோகம போராட்டக்களத்தில் ஊடகவியலாளர் றசிக குணவர்தன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.