முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையானது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை இப்பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் ஹர்சன கெக்குணவல இந்த பயணத்தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தென் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்த மனுவுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.