ஜனாதிபதி செயலகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது, வெள்ளிக்கிழமை (22) நள்ளிரவுக்குப் பின்னர், கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அம்பலப்படுத்துமாறும். அந்தத் தாக்குதல்க​ளை கண்டித்தும், இன்று (25)  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்​வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.