மல்லிகைத்தீவை பிறப்பிடமாகவும் தம்பிலுவிலை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வேலுக்குட்டி கணபதிப்பிள்ளை அவர்கள் இன்று (26.07.2022) காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இவர் எமது கட்சித் தலைவரின் மெய்க்காப்பாளர் தோழர் குலேந்திரன் அவர்களின் அன்புத் தந்தையாராவார்.

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு தந்தைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
27.07.2022.

தொடர்புக்கு : 0762640370 குலேந்திரன்