வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயம் அமைப்பின் செயலாளர் வைத்தியர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அவர்களுக்கும் ஏனைய இனப்பற்றாளர்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இன்றுமுற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது.

வவுனியா கோயில்குளம் அமரா் உமாமகேஸ்வரன் அவர்களின் ஞாபகார்த்த பொதுநூலகத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்,(மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது வைத்தியர் அமரா் இராஜசுந்தரம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி இடம்பெற்று, நினைவுச்சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் காந்தீயம் அமைப்பின் முன்னாள் நிர்வாக செயலாளர் திரு. வே.கணபதிப்பிள்ளை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் உபதலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜி்ரி்.லிங்கநாதன்(விசு), கட்சியின் நிர்வாக செயலாளர் பற்றிக், மன்னார் மாவட்ட இணைப்பாளர் கொன்சால், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ராஜா, வவுனியா வெண்கலச்செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் த.யோகராஜா( யோகன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் வே.குகதாசன்(குகன்), கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ரவி, சிவா, ஓசை, காளி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.