கொவிட் தொற்று காரணமாக, ராகம புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பணி புரியும் ஒரு புகையிரத நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ராகம புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், புகையிரத நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.