முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சிக்குள் இருந்துகொண்டு சுயாதீனமாக இயங்கி வரும் சதிகாரர்களை கட்சியிலிருந்து நீக்குவோம் எனவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.